மாதிரி படம் 
தமிழ்நாடு

சிவகாசியில் ஆணவக் கொலை?: பெண் வீட்டாரால் இளைஞர் வெட்டிக்கொலை

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரது காதலுக்குப் பெண்ணின் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது.

கிழக்கு நியூஸ்

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டி என்பவரை, பெண்ணின் சகோதரர்கள் இருவர் உள்பட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்கள்.

சிவகாசி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் பாண்டி (26), நந்தினி குமாரி (22). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்துள்ளார்கள். இவர்களுடையக் காதலுக்கு, பெண்ணின் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது. இருந்தபோதிலும், இருவரும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்றிரவு பெண்ணின் சகோதரர்கள் பாலமுருகன் மற்றும் தனபாலன் ஆகிய இருவர் மற்றும் உறவினர் ஒருவரால் கார்த்திக் பாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் பெண்ணின் சகோதரர்கள் இருவர் மற்றும் உறவினரைக் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது ஆணவக் கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.