ANI
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

மின்தடை குறித்த புகார்களை அளிக்க பொதுமக்கள் 94987 94987 எனும் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தமிழக மின்சார வாரியம் தகவல்

கிழக்கு நியூஸ்

வெயிலின் தாக்கம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளால் சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. எனவே தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் மேற்பார்வை பொறியாளர்கள் கள ஆய்வு செய்து பழுதுகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மின்சார வாரியம் தகவலளித்துள்ளது.

சென்னையின் புறநகரப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுவதாக எழுந்த புகாரை அடுத்து விளக்கமளித்துள்ள மின்சார வாரியம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகரப் பகுதிகளில் இரவு நேர மின் தடையைச் சரி செய்ய 60 சிறப்பு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

மின்தடை குறித்த புகார்களைத் தெரியப்படுத்த ‘மின்னகம்’ என்ற சேவை மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், 94987 94987 என்ற எண்ணைப் பயன்படுத்தி பொதுமக்கள் மின்னகம் சேவை மையத்தை அணுகலாம் எனவும் தகவல்.

கோடை காலத்தில் சீரான மின்சாரம் வழங்குவது தொடர்பாகத் தமிழக மின்சார வாரியம் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.