தமிழ்நாடு

மக்களவைக்குச் செல்லும் தமிழகத்தின் 5 பெண் எம்.பி.க்கள்!

ராம் அப்பண்ணசாமி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழகத்திலிருந்து 5 பெண் மக்களவை உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.

7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 இல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழகம்-புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது.

தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியுள்ள இந்த 40 உறுப்பினர்களில் 5 பேர் பெண்கள். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு:

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 3.92 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2.71 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2.25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 1.96 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1.16 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடைசியாக 2014 ஆம் வருடம் நடந்த 16வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் 4 பெண் உறுப்பினர்கள் தேர்வானார்கள்.

இந்த 18வது மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட 40 தொகுதிகளில், 20 தொகுதிகளுக்குப் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.