ANI
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி 50 சதவீதம் நிறைந்தது!

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 1812 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

யோகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக ஆந்திராவில் தொடர்மழை பெய்து வருகிறது.

இதனால் ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 1812 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

மழையின் காரணமாக 100 கன அடி நீரும், கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக 315 கன அடி நீர் என மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 415 கன அடி நீர் வரத்துள்ளது.