முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று வி.கே சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கோபியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன் “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை அடுத்த 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விடுத்தார். இது பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் வி.கே சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது -
நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம். கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து தம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம். கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
ஒன்றுபட்ட அதிமுகவால்தான் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும். செங்கோட்டையனின் கருத்துகள் ஒவ்வொன்றும் அதிமுக தொண்டர்களின் கருத்தாகும். தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்” இவ்வாறு கூறியுள்ளார்.
ADMK | Sasikala | Sengottaiyan | ADMK Issue | United ADMK | ADMK Clash | EPS | Edappadi Palaniswami