கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு: தவெக மாநாட்டின் முக்கிய அம்சங்கள்!
திராவிடம், தமிழ்த் தேசியம் இரு கண்கள்...
கிழக்கு நியூஸ்
இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் முக்கிய அம்சங்கள் - நேரலைப் பதிவின் வழியாக...
உரையை நிறைவு செய்தவுடன் கட்சிப் பெயர் விளக்கம் மற்றும் கட்சிக் கொடி விளக்கம் தொடர்புடையக் காணொளியை விஜய் வெளியிட்டார்.
மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து, பண்பட்ட அரசியலை செய்ய வந்துள்ளோம். அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, கொள்கை எதிரியாக இருந்தாலும் மரியாதையுடன் அணுகி மரியாதையுடன் தாக்குவோம்: விஜய்
நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துதான் பழக்கம். நம்மை நம்பி களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்
2026 ஒரு புதிய அரசியல் களத்தின் ஒரு புத்தாண்டு. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
நம்பி வருபவர்களுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு
அரசியல் பயணத்தில் முக்கியப் பங்கை வகிக்கப்போகிறவர்கள் பெண்கள்: விஜய்
எந்தொரு அடையாளத்துக்குள்ளும் நம்மை நாம் சுருக்கிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மண்ணின் உரிமைகளுக்காக மதச்சார்பற்ற சமூக நீதியைக் கொள்கை அடையாளமாகக் கொண்டு செயல்படவிருக்கிறோம்: விஜய்
கொள்கை, கோட்பாட்டின் அளவில் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் பிரித்துப் பார்க்கப்போவதில்லை. இவ்விரண்டும் இம் மண்ணின் இரு கண்கள்: விஜய்
தவெகவின் கொள்கை எதிரிகள்: விஜய்
பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை எதிரி.
திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நம் அடுத்த எதிரி.
மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றுகிறீர்கள்: விஜய்
அவர்கள் ஃபாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா?: திமுகவை சாடிய விஜய்
ஏ டீம், பி டீம் என பொய்ப் பிரசாரம் செய்து எங்களை வீழ்த்திவிடலாம் என நினைத்துவிட வேண்டாம்: விஜய்
சமுதாயத்துக்காக அரசியல் வாளேந்தி நிற்கும் கூட்டம் இது: விஜய்
மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல்: விஜய்
தமிழ்நாட்டை மாற்றக்கூடிய முதன்மை சக்தியாக இருப்பேன்: விஜய்
எங்களுடையக் கொள்கை, கோட்பாடு அனைத்தும் யதார்த்தமாக இருக்க வேண்டும். மாற்று சக்தி, மாற்று அரசியல் என்றெல்லாம் ஏமாற்றப்போவதில்லை: விஜய்
மக்களுக்காகக் கொண்டு வரும் திட்டங்கள், நடைமுறையில் சாத்தியமானவையாக இருக்க வேண்டும்: விஜய்
மதவெறி பிடித்தவர்களும், ஊழல்வாதிகளும் நம் எதிரிகள்: விஜய்
பிளவுவாத சக்திகளை எதிர்ப்பது மட்டும்தான் நம் கொள்கையா..?. நமக்கு மற்றொரு கொள்கையும் இருக்கிறதல்லவா..? ஊழல்மலிந்த கலாசாரம். இதை எதிர்க்க வேண்டும்: விஜய்
பிறப்பால் அனைவரும் சமம் என்று முன்வைத்தவுடனே, ஒரு கூட்டம் கதறத் தொடங்கியது - விஜய்
நம் நிலைப்பாட்டை கூறிவிட்டாலே, அரசியல் எதிரிகள் நம்முன் வந்து நிற்பார்கள் - விஜய்
சில விஷயங்களைப் பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் களமிறங்க வேண்டும்: விஜய்
வெறுப்பு அரசியலைக் கையிலெடுக்கக் கூடாது: விஜய்
சொல்ல அல்ல, செயல்தான் முக்கியம்..: விஜய்
பச்சைத் தமிழர் காமராஜர் - விஜய்
பச்சைத் தமிழர் காமராஜர் வழியில் தமிழக வெற்றிக் கழகம் செயல்படும்: விஜய்
பெரியார் எங்களுடையக் கொள்கைத் தலைவர் ஏன்?: விஜய் விளக்கம்
பெரியார் என்றதும் ஒரு கூட்டம் கதறத் தொடங்கியது. பெரியாருடையக் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. பெரியார் கொள்கைகளில் இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மற்றபடி, பெரியாரின் சமத்துவம், பெண் கல்வி உள்பட அனைத்துக் கொள்கைகளையும் ஏற்கிறோம். - விஜய்
நேரடியாகப் பேச வேண்டும். எதையும் சுற்றிவளைத்துப் பேசக் கூடாது. கோபத்தில் கொந்தளிக்கக் கூடாது. அடுக்குமொழியில் பேச வேண்டிய தேவையில்லை. வரலாற்று வாசகங்களை முன்வைக்கப்போவதில்லை - விஜய்
நாங்கள், நீங்கள் என்பது எதற்கும், நாம் என்ற நிலைப்பாட்டோடு பயணிப்போம் - விஜய்
ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் எனது உயிர் வணக்கங்கள் - விஜய்
நம்மைப் பொறுத்தவரை மேலே, கீழே என்றெல்லாம் யாரும் இல்லை. அனைவரும் சமம்! - விஜய்
பேச்சைத் தொடங்கியபிறகு, மேடை நாகரிகம் கருதி தலைமை நிர்வாகிகளை வரவேற்பதாக விஜய் பேச்சு...
பாம்பைக் கண்டு படை நடுங்கினாலும், குழந்தைக்குப் பயம் தெரியாது. அந்தப் பாம்புதான் இங்கு அரசியல். அப்படி பாம்பைப் பிடித்து விளையாட ஆரம்பித்துள்ளேன் - விஜய்
தவெக மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
"நண்பர் விஜய் எனக்கு ரொம்ப வருட நண்பர். சிறிய வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என்னுடைய முதல் படத்தை அவரை வைத்துதான் நான் தயாரித்தேன். நீண்டகால நண்பர். அவருடையப் புதிய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
களைகட்டும் கலை நிகழ்ச்சி!
மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மாநாட்டில் அரங்கேறி வருகின்றன.
திரைத் துறையினர் வாழ்த்து!
நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஷாந்தனு, விமல், பாடலாசிரியர் விவேக், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் விஜயின் மாநாட்டுக்கு எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மாலை 4 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் விஜய் கட்சிக் கொடியேற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டில் மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டில் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக கட்சிப் பாடலுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
விஜயின் பெற்றோர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் பங்கேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் காலை முதல் வருகை தரத் தொடங்கியதால், அவர்களைக் காக்க வைக்க வேண்டாம் என முன்கூட்டியே மாநாட்டைத் தொடங்கியுள்ளார்கள்.