கோப்புப் படம் ANI
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை: ட்ரோன்கள் மூலம் பக்தர்களை கண்காணிக்கும் வனத்துறையினர்

யோகேஷ் குமார்

வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை ட்ரோன்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலையின் 7-வது மலை உச்சியில் உள்ள சிவனை தரிசிக்க, பிப். 12 முதல் பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இதய பிரச்னை மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும், தற்போது கோடை காலம் என்பதால் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருப்பதை கண்காணிக்க ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.