உதயநிதி @tamilnaduassembly
தமிழ்நாடு

உசைன் போல்ட், தோனி, மு.க. ஸ்டாலின்: உதயநிதி புகழாரம்

திமுக அணி மக்களவைத் தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி 40-க்கு 40 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

யோகேஷ் குமார்

அரசியலில், முதல்வர் ஸ்டாலின் அவரது சாதனைகளை அவரே முறியடித்துக் கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன், மானியக்கோரிக்கை விவாதங்கள் மீதான பதிலுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது

விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் வரலாற்றில் ஒருசிலரின் பெயர்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். ஓட்டப்பந்தயத்துக்கு உசைன் போல்ட், கிரிக்கெட்டுக்கு தோனி அதுபோல அரசியலுக்கு ஸ்டாலின்.

ஒலிம்பிக் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் இருவரும் வெற்றிகளையும், பதக்கங்களையும் அடுக்கடுக்காக குவித்து சாதனை படைத்தவர்கள். ஒவ்வொரு போட்டியிலும், இவர்களின் சாதனைகளை இவர்களே முறியடித்துக் கொள்வார்கள். அப்படிதான் ஸ்டாலின் களம் காணும் ஒவ்வொரு தேர்தலிலும், தனது முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் வெற்றிகளை குவித்து வருகிறார்.

நமது திமுக அணி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி 40-க்கு 40 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த மகத்தான வெற்றியைப் பரிசளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த வெற்றிக்கு காரணம் ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.