தமிழ்நாடு

ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்ற தவெக வாகனம்: 8 கி.மீட்டரை 5 மணி நேரம் கடந்த விஜய் | TVK Vijay | Trichy |

விஜய்யின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல்...

கிழக்கு நியூஸ்

கப்பட்டிருந்தது. திருச்சியில் விஜய்யின் பரப்புரையை ஒட்டி தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால் ஆமை வேகத்தில் நகரும் பிரசார வாகனத்திற்கு 6 கி.மீட்டரைக் கடக்க 3 மணி நேரம் ஆனது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் இன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், திருச்சியில் மரக்கடை பகுதியில் பேசினார். இதற்காக காலை 10 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். முன்னதாக அவரது பிரசாரத்திற்கு பிரத்யேக வாகனம் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் ஏறிய நிலையில், திரண்டிருந்த தொண்டர்கள் அவரது வாகனத்தைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் விமான நிலையத்தை விட்டுப் புறப்படவே கால தாமதம் ஆனது.

இந்நிலையில், விமான நிலையம் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதிக்கு வர மிகவும் கால தாமதம் ஆனது. விஜய் வரும் வழியில் சாலை நெடுகிலும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ள தொண்டர்கள் திரண்டுள்ளதால், வாகனத்தால் வேகமாக நகர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆமை வேகத்தில் வாகனம் நகர்ந்த வாகனம் 5 மணி நேரம் பயணித்து மரக்கடைக்கு வந்தடைந்தது.

பரப்புரைக்கு அனுமதி அளித்திருந்த காவல்துறை காலை 10:30 முதல் 11 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தபோதும் விஜய் மரக்கடை பகுதிக்கு வந்து 15 நிமிடம் உரையாற்றினார்.

திருச்சியின் பிரதான சாலையில் தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருச்சி நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும் மரக்கடை, காந்தி மார்க்கெட் பகுதியில் விஜய்யின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

TVK Vijay | Vijay | Vijay Tour | Tamilaga Vettri Kazhagam | Trichy |