தமிழ்நாடு

தந்தை பெரியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை

அறிவார்ந்த, சமத்துவ சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.

ராம் அப்பண்ணசாமி

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு மரியாதை செய்து, தன் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தை ஒட்டி, தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் விஜய் பதிவிட்டவை பின்வருமாறு,

`சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்’ என்றார்.

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் விஜய். தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக தந்தை பெரியாரை அவர் அறிவித்தார்.