தவெக நிர்வாகி அஜிதா  படம்: https://x.com/AjithaAgnel14
தமிழ்நாடு

கிடைக்காத மா.செ. பொறுப்பு: தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி? | TVK Vijay | Ajitha |

தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி கோரியிருந்த நிலையில், அது சாமுவேல் ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டது.

கிழக்கு நியூஸ்

தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் 120 மாவட்டச் செயலாளர்களை ஏற்கெனவே நியமித்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்டத்துக்கானச் செயலாளரை அறிவித்தார்.

தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர் அஜிதா ஆக்னல். ஆனால், அன்றைய நாள் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவிக்கானத் தேர்வில் தனது பெயர் இடம்பெறவில்லை என்பதை அறிந்துகொண்ட அஜிதா, பனையூரிலுள்ள தவெக தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு, பகல் 1 மணியளவில் பனையூர் அலுவலகம் நோக்கி வந்த விஜயின் காரை மறித்து அஜிதா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் முற்றுகையிட முயற்சித்தார்கள். பிறகு, பாதுகாவலர்களால் விலக்கிவிடப்பட விஜயின் கார் சென்றது.

இவை அனைத்தையும் கடந்து தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி சாமுவேல் ராஜ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் மாலை வரை அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தவெகவின் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், அஜிதாவைச் சமாதானம் செய்ய முயற்சித்தார். அது பலனளிக்கவில்லை.

திமுகவின் தூண்டுதலின் பெயரில் இயங்குவதாகவும் அஜிதா மீது தவெகவினர் சிலர் குற்றம்சாட்டியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் தான் அஜிதா தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அஜிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து திரும்பிய பிறகு அவர் சரிவர உணவை எடுத்துக்கொள்ளாமல் ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம், அவர் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜிதா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

TVK Vijay | Vijay | TVK | TVK Ajitha | Tuticorin Central District Secretary | TVK Tuticorin | TVK District Secretary |

TVK Cadre Ajitha Hospitalised in Tuticorin After Suicide Attempt Over District Secretary Post