தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுக்க தொகுதிவாரியாக தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் 2 பெண்கள், 5 ஆண்கள் என 7 பேர் தற்காலிகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.