சென்னையில் 42 ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் 
தமிழ்நாடு

சென்னையில் 42 ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள்: தகவல்

யோகேஷ் குமார்

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் மூலமாக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வாங்கும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பின்போது, இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ரயில் சேவை வழக்கம் போல் செயல்பட ஆரம்பிக்க, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் சேவையும் படிப்படியாகத் தொடங்கப்பட்டது.

தெற்கு ரயில்வேயில் இதுவரை 166 இடங்களில் 353 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் உள்ளன. இதை விரிவுப்படுத்தும் வகையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் தாம்பரம், மாம்பலம், வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், பெரம்பூர், மயிலாப்பூர், சேப்பாக்கம் உட்பட 42 ரயில் நிலையங்களில் 100 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.