தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உயரும் தக்காளியின் விலை!

கிழக்கு நியூஸ்

சென்னையில் கடந்த வாரம் ரூ. 15-க்கு விற்பனையான தக்காளி, தற்போது கிலோ ரூ. 60-க்கு விற்பனையாகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரகாலமாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வியாபாரிகள் கோடை மழையைக் காரணம் கூறுகிறார்கள்.

காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதன் காரணத்தால், விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் ரூ. 15-க்கு விற்பனையாகி வந்த தக்காளி, தற்போது ரூ. 60-க்கு விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு தக்காளியை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் வந்த இடத்தில் தற்போது 30 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதனால், தக்காளிக்கான தேவை அதிகரிக்கிறது. தேவையின் அடிப்படையில் விலை உயர்த்தி விற்கப்படுகிறது. பீன்ஸ் கிலோ ரூ. 260 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்பனையாகி வருகிறது. இதே தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ. 5-க்கு விற்பனையாகி வந்தது.

அதேசமயம், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளன.