எஸ்.ஐ.ஆர். பணிகளைப் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு 
தமிழ்நாடு

எஸ்.ஐ.ஆர். பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு | Special Intensive Revision |

கூடுதல் பணிகளைக் கருத்தில் கொண்டு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்....

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைப் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, உள்ளிட்ட 9 மாநிலங்கள், மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணிகளில் மொத்தம் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 2.37 லட்சம் வாக்குச்சாவடி முகவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் அதிகாரிகளைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், வருவாய்த்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீடு, உரிய திட்டமிடல் மற்றும் பயிற்சி அளிக்காமல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நிர்பந்திப்பதால் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் கூடுதல் பணிகளைக் கருத்தில் கொண்டு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வைத்துள்ளனர்.

அதை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் வருவாய்த்துறை ஊழியர்கள், இதனால் வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களைச் சேகரிப்பது, அவற்றை இணையத்தில் பதிவேற்றுவது மற்றும் மறுஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது போன்ற அனைத்துப் பணிகளையும் முற்றிலும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்துள்ளார்கள்.

The Revenue Officers' Association has announced that it will boycott the special revision work of the electoral roll in Tamil Nadu from Tuesday.