ANI
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு | TNPSC |

செப்டம்பர் 28 அன்று தேர்வு நடைபெறும் நிலையில் அதிகாரப்பூர்வ வெளியீடு...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - குரூப் 2 மற்றும் 2ஏ-க்கான தேர்வுகள் வரும் 28-ல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்கள் ஹால் டிக்கெட்டை உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது ஒடிஆர் டாஷ்போர்டில் (OTR Dashboard) மூலம், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு மட்டுமே அனுமதிச் சீட்டைப் பதிவிறக்க வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கிக் கொண்டு, தேர்வு மையம் குறித்த விவரங்களை உறுதி செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டால் தேர்வாணையத்தின் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.