தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! TNPSC | Group 1 | Preliminary Exam

வரும் டிசம்பர் 1 முதல் 4 வரை முதன்மைத் தேர்வுகள் சென்னையில் மையத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு.

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஜூன் 15 அன்று நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. இன்று (ஆக. 28) வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆகிய பதவிகளுக்கான 70 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1 (குரூப் 1) தேர்வு அறிக்கையை கடந்த ஏப்ரல் 1 அன்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, ஜூன் 15-ம் தேதி காலை 9.30 தொடங்கி நண்பகல் 12.30 வரை முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று (ஆக. 28) வெளியாகியுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், முதன்மை தேர்வில் (Mains Exam) கலந்துகொள்ள செப். 3 முதல் செப். 12 வரை ரூ. 200 கட்டணத்தை செலுத்தி இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

வரும் டிசம்பர் 1 முதல் 4 வரை முதன்மைத் தேர்வுகள் சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: tnpsc.gov.in மற்றும் tnpscexams.in