டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு 
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு

யோகேஷ் குமார்

டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பாக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணிகள் குரூப்- 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்நிலையில் நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 90 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வு ஜூலை 13 அன்று நடைபெறுகிறது. இன்று முதல் ஏப்ரல் 27 வரை இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.