டிஎன்பிஎஸ்சி 
தமிழ்நாடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணியில் 861 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

விண்ணப்பங்கள் செப்டம்பர் 11 வரை பெறப்படுகிறது.

யோகேஷ் குமார்

தமிழக அரசின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

உதவி சோதனையாளர், உதவி பயிற்சி அலுவலர், செயற்பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உட்பட 861 காலியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி

இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு பணிக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். ஐடிஐ, டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

துறை சார்ந்த பிரிவில் அதற்கேற்ப தொழிற்கல்வி பாடப்பிரிவை எடுத்து படித்திருப்பது அவசியமாகும்.

கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வுக்கான அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு

தேர்வர்கள் அனைத்து பணிகளுக்கும் (இயக்கூர்தி ஆய்வாளர் பதவியை தவிர) 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இயக்கூர்தி ஆய்வாளர் பணிக்கு மட்டும் 21 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பங்கள் செப்டம்பர் 11 வரை பெறப்படுகிறது.

இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதல் தாள் தேர்வு வருகிற நவம்பர் 9 அன்றும், இரண்டாம் தாள் தேர்வு நவம்பர் 11 முதல் 14 வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு

https://www.tnpsc.gov.in/Document/tamil/CTSE_DIP_Tamil_13.08.2024_.pdf

https://t.co/3yEXSWXAui