2026-க்கான அரசு விடுமுறை நாள்களின் பட்டியலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் உழவர் திருநாள், தைப்பூசம், சுதந்திர தினம், தீபாவளி ஆகிய ஐந்து அரசு விடுமுறைகள், வார இறுதி நாள்களில் வருகின்றன.
ஆண்டுதோறும் முக்கிய நாள்கள், பண்டிகைகள் உட்பட அரசு விடுமுறை நாள்களின் பட்டியலைத் தமிழ்நாடு அரசு வெளியிடுவது வழக்கம். அதன்படி, 2026-க்கான அரசு பொது விடுமுறை நாள்களின் பட்டியலை அறிவித்து, தலைமைச் செயலர் முருகானந்தம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆங்கிலப் புத்தாண்டு - ஜனவரி 1 (வியாழக்கிழமை), பொங்கல் விடுமுறைகள் - ஜனவரி 15 (வியாழக்கிழமை) முதல் ஜனவரி 17 (சனிக்கிழமை) வரை, குடியரசு தினம் - ஜனவரி 26 (திங்கட்கிழமை), தைப்பூசம் - பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை), தெலுங்கு வருடப்பிறப்பு - மார்ச் 19 (வியாழக்கிழமை), ரம்ஜான் - மார்ச் 21 (சனிக்கிழமை), மகாவீர் ஜெயந்தி - மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை), வங்கிகள் ஆண்டு கணக்கு - ஏப்ரல் 1 (புதன்கிழமை), புனித வெள்ளி - ஏப்ரல் 3 (வெள்ளிக்கிழமை), தமிழ்ப்புத்தாண்டு - ஏப்ரல் 14 (செவ்வாய்க்கிழமை). மே தினம் - மே 1 (வெள்ளிக்கிழமை), பக்ரீத் - மே 28 (வியாழக்கிழமை), மொஹரம் - ஜூன் 26 (வெள்ளி), சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை),
மிலாதுநபி - ஆகஸ்ட் 26 (புதன்கிழமை), கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 4 (வெள்ளி), விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர் 14 (திங்கள்), காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 (வெள்ளி), ஆயுத பூஜை - அக்டோபர் 19 (திங்கள்), விஜயதசமி - அக்டோபர் 20 (செவ்வாய்), தீபாவளி - நவம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை), கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 (வெள்ளிக்கிழமை)
ஆகிய நாள்கள் அரசு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
The Tamil Nadu government has released the list of government holidays for 2026. In this, five government holidays—Uzhavar Thirunal, Thaipusam, Independence Day, and Deepavali—are falling on weekends.