தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு: மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கூட்டமாக மார்ச் 22-ல் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த முன்மொழிந்து, இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது தொடர்புடைய ஆலோசனைக் குழுவில் பங்கேற்க பல்வேறு மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத் தொகுதிகள் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு 'கூட்டு நடவடிக்கைக் குழு' அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதல்வர் 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மாநிலங்களிலுள்ள பல்வேறு முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று (7.3.25) கடிதம் எழுதியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவத்மான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது: