டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நடக்கும் சைபர் குற்றச் செயல்களில், காவல்துறை, நீதிமன்றங்களைப் போல் காட்டிக்கொண்டு மக்களிடம் கொள்ளையடிக்கும் டிஜிட்டல் கைது மோசடி அதிகரித்து வருகிறது. அவற்றின் மக்களைப் பொய்யாகக் கைது செய்து அவர்களை விடுவிக்க மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் ஜோதிமால்ய பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிட்டல் கைது குறித்து விசாரிக்க சிபிஐக்கு அதிகாரமளித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் நீதிபதிகள் கூறியதாவது:-
“குடிமக்களை ஏமாற்ற மோசடி செய்பவர்களுடன் செயல்படும் வங்கி அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும். குடிமக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்க சுதந்திரம் வழங்கப்படுகிறது. சைபர் குற்றங்களைக் கையாள்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். இதுபோன்ற ஆன்லைன் டிஜிட்டல் கைது மோசடிகளை கையாள்வதற்கு மாநில சைபர் குற்ற தடுப்பு பிரிவின் மையங்களை அமைக்க வேண்டும். சைபர் குற்றங்களில் பயன்படுத்தக்கூடிய பல சிம் கார்டுகளை, வேறு பயனருக்கு வழங்குவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் டிஜிட்டல் கைது வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். சர்வதேச சைபர் குற்றவாளிகளை அணுக இன்டர்போலின் உதவியை சிபிஐ அணுக வேண்டும்” என்றனர்.
மேலும், சைபர் மோசடி வழக்குகளில் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதது ஏன்? என்று ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
The Supreme Court has ordered a nationwide CBI investigation into digital arrests scam