டீ கடை (கோப்புப் படம்) ANI
தமிழ்நாடு

சென்னையில் செப்.1 முதல் டீ, காபி விலை உயர்வு! | Tea | Coffee |

சென்னையில் நாளை (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

சென்னையில் நாளை (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிளாஸ் டீ ரூ. 10 - ரூ. 12-ல் இருந்து ரூ. 15 ஆகவும் காபி ரூ. 15-ல் இருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு டீ, காபியின் விலை ஏற்றப்படுகிறது.

பால் விலை, டீ, காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு போன்ற காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.