தமிழக நிலவரம் நேரலை: கோவையில் தோல்வியடைந்த அண்ணாமலை அறிக்கை
அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கிழக்கு நியூஸ்
அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சசிகாந்த் செந்தில் மிகப்பெரிய வெற்றி
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி. சசிகாந்த் செந்தில், 7.96 லட்சம் வாக்குகளைப் பெற்றார்.
கோவையில் தோல்வியடைந்த அண்ணாமலை அறிக்கை
கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
- அண்ணாமலை (எக்ஸ் தளத்தில் பதிவு)
தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை கோவையில் தோல்வி!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வி. 34000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை வெற்றி!
காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் க.செல்வம் வெற்றி!
இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மைச் சோர்வடையச் செய்யாது: எடப்பாடி பழனிசாமி
பாஜகவின் கனவு பலிக்கவில்லை: ஸ்டாலின் பெருமிதம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தொகுதியில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. பாஜகவின் கனவு பலிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு கூட கருத்துகணிப்பு என்ற பெயரில் அவர்கள் உளவியல்ரீதியாக தாக்குதல் நடத்தினார்கள்.
இது எங்கள் கூட்டணியின் வெற்றி. பாஜகவின் ஊடக பலம், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவற்றைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த வெற்றியை கலைஞருக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.
இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு நான் செல்கிறேன்.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்
என்னை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: சௌமியா அன்புமணி
நீலகிரியில் மத்திய அமைச்சர் எல். முருகன் தோல்வி
திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி
தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை தோற்கடித்தார் விஷ்ணு பிரசாத்
வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி
திமுக செய்துள்ள பணிகளால் அதன் கூட்டணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது - கமல்ஹாசன்
மதுரையில் சு.வெங்கடேசன் வெற்றி!
சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2.09 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் வெற்றி!
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை தோற்கடித்தார்.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வி!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
தர்மபுரியில் திமுக வெற்றி!
திமுக வேட்பாளர் ஆ.மணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை 18524 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி!
4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் வெற்றி!
தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை: மீண்டும் திரும்புகிறதா 2004 ?
தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 20000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
மோடி அலை வட இந்தியாவில் இல்லை, மோடி அலை என்பது மாயை.
குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது கவலை அளிக்கிறது.
ராமர் கோவிலை வைத்து அரசியல் செய்தது வெற்றி பெறவில்லை
`திருமாவளவன் போட்டியிடவே கூடாது என தேர்தலுக்கு முன்பே பலரும் ஆரூடம் சொன்னார்கள், வேறு எங்காவது போகட்டும் என அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் சொன்னேன் இது (சிதம்பரம் தொகுதி) என் தாய் மடி, மக்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது’.
இதுவரை பன்னீர்செல்வங்கள் பெற்ற வாக்குகள்!
தமிழகத்தில் 29 இடங்களில் அதிமுக இரண்டாம் இடம்
தமிழகத்தில் 10 இடங்களில் பாஜக இரண்டாம் இடம்
தமிழகம் - புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை!
தர்மபுரியில் செளமியா அன்புமணி பின்னடைவு!
13000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணி, பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை விட முன்னிலையில் உள்ளார்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி!
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை வெற்றி.
பாஜக வேட்பாளர் நந்தினியை வீழ்த்தினார் தாரகை.
2021 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற விஜயதாரணி ராஜினாமா செய்ததால், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னேறும் சச்சிதானந்தம்!
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தமிழக வேட்பாளர்களிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 300000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் சச்சிதானந்தம்.
தர்மபுரியில் குறைகிறது வாக்கு வித்தியாசம்!
பாமக வேட்பாளர் செளமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைந்து வருகிறது. தற்போது 9000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் செளமியா அன்புமணி.
கோவையில் அண்ணாமலைக்குப் பின்னடைவு
பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரைவிட 30000 வாக்குகள் பின்தங்கி இருக்கிறார்
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 5000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.
அதிமுக கூட்டணி பரிதாபம்!
1 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி:
28 தொகுதிகளில் 2வது இடம்
9 தொகுதிகளில் 3வது இடம்
விருதுநகர் தொகுதியில் கடும் இழுபறி!
தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இடையே கடும் இழுபறி!
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் தாரகை முன்னிலை!
புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை!
காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம்!
ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு மூன்றாவது இடம்
ராமநாதபுரத்தில் இதுவரை பன்னீர்செல்வங்கள் பெற்ற வாக்குகள்!
ஓ. பன்னீர்செல்வம் - 53,167 வாக்குகள் (முன்னாள் முதல்வர்)
ஒ. பன்னீர்செல்வம் - 573 வாக்குகள் (ஒச்சப்பன் மகன்)
ம. பன்னீர்செல்வம் - 433 வாக்குகள் (மலையாண்டி மகன்)
ஒ. பன்னீர்செல்வம் - 314 வாக்குகள் (ஒய்யாத்தேவர் மகன்)
ஒ. பன்னீர்செல்வம் - 220 வாக்குகள் (ஒய்யாரம் மகன்)
ஓ. பன்னீர்செல்வம் - 107 வாக்குகள் (ஒச்சாத்தேவர் மகன்)
விஜயபிரபாகரன் மீண்டும் முன்னிலை!
7000 வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை
இயக்குனர் தங்கர்பச்சான் பின்னடைவு
கடலூர் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் மூன்றாவது இடத்தில் உள்ளார்
12 மணி நிலவரம்:
திமுக கூட்டணி - 38
பாஜக கூட்டணி - 1
அதிமுக கூட்டணி - 0
நாம் தமிழர் கட்சி - 0
நாமக்கல் தொகுதியில் கடும் போட்டி!
திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனுக்கும், அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கும் இடையே கடும் போட்டி
அதிமுக கோவையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது!