தமிழ்நாடு

கிழக்கு பதிப்பகத்தின் இரு நூல்களுக்கு தமிழக அரசு விருது

பொறியியல், தொழில்நுட்பவியல் பிரிவில் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இந்த நூல் விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

கிழக்கு நியூஸ்

எழுத்தாளர் ஹரிஹரசுதன் தங்கவேலுவின் 'இஸ்ரோவின் கதை' எனும் நூல், 2021-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

பொறியியல், தொழில்நுட்பவியல் பிரிவில் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இந்த நூல் விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையின் 'பொருளியல் வணிகவியல், மேலாண்மையியல்' பிரிவில் 2020ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருதுக்கு எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் எழுதிய 'மியூச்சுவல் ஃபண்ட்' நூல் தேர்வாகியுள்ளது.

சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2020, 2021-ம் ஆண்டுகளின் சிறந்த நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு வழங்கவுள்ளது. இந்தப் பரிசு வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது.