தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சௌந்தர்யா. இவர் நீண்ட நாள்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது சிகிச்சை குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பகிர்ந்து வந்திருக்கிறார். சிகிச்சைக்கு நிதியுதவி கோரியும் பதிவுகளைப் பதிவிட்டு வந்தார்.
தொடர் சிகிச்சைகளை மீறியும் சௌந்தர்யா இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.