பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! | 12th Board Exam | 10th Board Exam | Anbil Mahesh |

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 அன்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 அன்றும் தொடங்குகின்றன.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் நடைபெறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸ் பொதுத்தேர்வு அட்டவணைகளை வெளியிட்டார்.

அன்பில் மகேஸ் கூறியதாவது:

"12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்பது ஏறத்தாழ 8.07 லட்சம் மாணாக்கர் எழுதக்கூடிய தேர்வு. இந்தப் பொதுத்தேர்வுக்கான தேதி என்பது வரும் மார்ச் 2-ல் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 26 வரை நடைபெறும். இதற்கு முன்பாக செய்முறைத் தேர்வு பிப்ரவரி 9 அன்று ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 14 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 5 அன்று வெளியாகும்.

10-ம் வகுப்புக்கான தேர்வு தேதி என்பது மார்ச் 11 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 6 அன்று நிறைவடையும். செய்முறைத் தேர்வு என்பது பிப்ரவரி மாதம் 23 அன்று ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28 நிறைவடையும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணாக்கர் எழுதுகிறார்கள். தேர்வு முடிவுகள் மே 20 அன்று வெளியாகும்.

11-ம் வகுப்பில் அரியர் வைத்தவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 அன்று ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 27 வரை நடைபெறும். இதற்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 16 அன்று ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 21 வரை நடைபெறும். மே 20 அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும்" என்றார் அன்பில் மகேஸ்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  • மார்ச் 11 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

  • மார்ச் 16 - ஆங்கிலம்

  • மார்ச் 25 - கணிதம்

  • மார்ச் 30 - அறிவியல்

  • ஏப்ரல் 2 - சமூக அறிவியல்

  • ஏப்ரல் 6 - விருப்ப மொழி

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2, மார்ச் 5, மார்ச் 9, மார்ச் 13, மார்ச் 17, மார்ச் 23, மார்ச் 26 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

Tamil Nadu's 10th and 12th Board Exams timetable is out. Class 10 board exams will be conducted from March 11 to April 16. Class 12 board exams will be conducted between March 2 and March 26

10th Board Exam | 12th Board Exam | Anbil Mahesh |