தமிழ்நாடு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில் சுற்றுலா: தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!

காலை 8.30 தொடங்கி இரவு 7.45 வரை, குளிர்சாதன பேருந்தில் அம்மன் கோயில்களை தரிசனம் செய்ய சென்னையில் 2 பயண திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் கட்டண ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாப் பயணத்திற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி வரும் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 15 வரை சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அம்மன் கோயில்களை கட்டண அடிப்படையில் ஒரு நாளில் தரிசிக்கும் வகையிலான ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 தொடங்கி இரவு 7.45 வரை, குளிர்சாதன பேருந்தில் அம்மன் கோயில்களை தரிசனம் செய்ய சென்னையில் 2 பயண திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுலா திட்டம் 1 - நபர் ஒன்றுக்கு ரூ. 1,000 கட்டணம்

பாரிஸ் கார்னர் – காளிகாம்பாள் கோயில், ராயபுரம் – அங்காள பரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் – வடிவுடையம்மன் கோயில், பெரியபாளையம் – பவானி அம்மன் கோயில், புட்லூர் – அங்காள பரமேஸ்வரி கோயில், திருமுல்லைவாயில் – திருவுடையம்மன் கோயில், பச்சையம்மன் கோயில், கொரட்டூர் - சீயாத்தம்மன் கோயில் மற்றும் வில்லிவாக்கம் – பாலியம்மன் கோயில்.

சுற்றுலா திட்டம் 2 - நபர் ஒன்றுக்கு ரூ. 800 கட்டணம்

மயிலாப்பூர் – கற்பகாம்பாள் கோயில், முண்டகக்கன்னியம்மன் கோயில், கோலவிழியம்மன் கோயில், தி.நகர் – ஆலையம்மன் கோயில், முப்பாத்தம்மன் கோயில், சைதாப்பேட்டை – பிடாரி இளங்காளியம்மன் கோயில், பெசண்ட் நகர் – அஷ்டலட்சுமி கோயில், மாங்காடு – காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு – தேவி கருமாரியம்மன் கோயில் மற்றும் கீழ்பாக்கம் – பாதாள பொன்னியம்மன் கோயில்.

பயணத் தேதிகள்: ஜூலை 18, 20, 22, 25, 27 மற்றும் 29, ஆகஸ்ட் 1, 3, 5, 8, 10 12 மற்றும் 15.

பிற மாவட்ட அம்மன் கோயில் சுற்றுலா பயண திட்டங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.ttdconline.com