ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,037 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
49,353 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ. 23,303.15 கோடி முதலீட்டில் 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ. 1,003.85 கோடி முதலீட்டில் 4,483 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆக மொத்தம் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாடு முதல்வர் ரூ. 250 கோடி முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 3 முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்தார். ரூ. 1,210 கோடி முதலீட்டில் 7,900 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MK Stalin | TN CM MK Stalin | Investor's Meet | Hosur Investor's Meet |