கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள்

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை உள்பட புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த பிப்ரவரியில் தெரிவித்தார்.

இதுதொடர்புடைய ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ககன்தீப் சிங் உள்பட 9 அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

இந்த நிலையில் மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், அரக்கோணத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு அமையவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்காக நிலத்தை அடையாளம் காண தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

முதற்கட்டமாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமைக்கவும், இரண்டாம் கட்டமாக அரக்கோணம், பெரம்பலூர், ராணிப்பேட்டையில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.