தமிழ்நாடு

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் (படங்கள்) | Stalin |Germany |

ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான டசெல்டோர்ஃப்-புக்குச் (Düsseldorf) சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒரு வார கால அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட்டார்.

விமான நிலையத்தில் பேட்டியளித்த ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ. 10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

இந்நிலையில் இன்று ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான டசெல்டோர்ஃப்-புக்குச் (Düsseldorf) சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.

டசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இதுகுறித்த தகவலை எக்ஸ் தளத்தில் தெரிவித்து படங்களையும் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.