பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
இதைத் தொடர்ந்து, பசும்பொன் சென்ற முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவர் குறித்து முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி புகழ்ந்து பேசியதை நினைவுகூர்ந்து பேசினார்.
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.