தமிழ்நாடு

கருப்புக்கொடி ஏந்தி தமிழக பாஜக தலைவர்கள் போராட்டம்!

தமிழக மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து விட்டுக்கொடுத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை...

கிழக்கு நியூஸ்

திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர்களும் தொண்டர்களும் இன்று தங்கள் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு. குடிநீரைக் கோட்டை விட்டு, தமிழக மக்களைக் குடிகாரர்களாக்கிய திமுக அரசைக் கண்டித்து மார்ச் 22 அன்று காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ளது தனது வீட்டின் முன்பு தொண்டர்களுடன் இணைந்து கருப்புக்கொடியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அதேபோல கருப்புக்கொடி ஏந்தி பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜனும் வானதி சீனிவாசனும் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து விட்டுக்கொடுத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைத் தமிழகம் முழுக்க பாஜக தொண்டர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று நடக்கக் கூடிய தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் வெறும் நாடகம் மட்டுமே. தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்கள் விகிதாசார அடிப்படையில் ஒரு தொகுதியையும் இழக்கப் போவதில்லை என்றார்.