சுதா சேஷய்யன் 
தமிழ்நாடு

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷய்யன் நியமனம்!

இந்த பதவியில் சுதா சேஷய்யன் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.

யோகேஷ் குமார்

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

செம்மொழித் தமிழின் தொன்மை, தனித் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து அதனை பாதுகாப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

இந்நிலையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியில் சுதா சேஷய்யன் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தற்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநராக உள்ளார்.