அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் பேருந்துகள் ஓடாது என சிஐடியூ தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல ஆணையம் மற்றும் தமிழக அரசு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
சிஐடியூ பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நள்ளிரவு 12 மணி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவித்தார். வெளியூர் செல்லும் பேருந்துகள்
அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வைத்துள்ள 6 அம்ச கோரிக்கைகள்:
வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச செலவை அரசு கொடுக்க வேண்டும்
ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும்
ஊதிய ஒப்பந்தங்கள் வரும்போது ஓய்வூதியர்களுக்கு ஊதிய விகித ஒப்பந்தப் பலனைக் கொடுக்க வேண்டும்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்
2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்துள்ளவர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்
15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்