மாதிரி படம் 
தமிழ்நாடு

வங்கதேச ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழகக் காவலர்!

இவர் கடந்த சில நாள்களுக்கு மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பில் சென்றுள்ளார்.

கிழக்கு நியூஸ்

வங்கதேச எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) அந்த நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜான் செல்வராஜ் என்பவர் தாம்பரம் நகர காவல் நிலையத்தில் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார். இவர் கடந்த சில நாள்களுக்கு மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில், வங்கதேச எல்லையில், அந்த நாட்டு ராணுவத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு காவல் துறைக்கு இதுதொடர்புடைய தகவல் கிடைத்துள்ளது.

இவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும், சென்னை தாம்பரத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இங்கு பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது.