blackday
தமிழ்நாடு

கல்லூரி மாணவி கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ரூ. 10,500 அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

சென்னையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியைக் குத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினி, கே.கே. நகரிலுள்ள கல்லூரியில் படித்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் அஸ்வினியை ஒருதலையாகக் காதலித்திருக்கிறார். இதற்கு அஸ்வின் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அழகேசன் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பாக, அஸ்வினி தரப்பில் காவல் துறையிடம் புகார் தெரிவிக்க, அழகேசன் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளிவந்த அவர் கடந்த 2018-ல் மார்ச்சில் கல்லூரி வாயிலில் வைத்து அஸ்வினியைக் குத்திக் கொன்றார்.

இந்தக் கொலை வழக்கானது சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ. 10,500 அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.