ANI
தமிழ்நாடு

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மே 20, 21-ல் அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தேனி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் மூன்று நாள்கள் (மே 19, 20, 21) அதிகனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் மே 20, 21-ல் அதிகனமழை பெய்யக்கூடும்.

விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த இருநாள்கள் (மே 20, 21-ல்) கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான், மாலத்தீவு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.