படம்: https://x.com/GMSRailway
தமிழ்நாடு

புறநகர் ஏசி ரயில்: வாட்ஸ்ஆப்பில் கருத்து கேட்கும் தெற்கு ரயில்வே!

கருத்துகளைத் தெரிவிப்பதற்காகப் பிரத்யேகமாக இணைப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளது தெற்கு ரயில்வே.

கிழக்கு நியூஸ்

புறநகர் குளிர்சாதன ரயில் சேவையின் நேரம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க முன்வந்துள்ளது தெற்கு ரயில்வே.

சென்னையில் ஏப்ரல் 19 முதன்முறையாக புறநகர் குளிர்சாதன ரயில் சேவை ஏப்ரல் 19-ல் தொடங்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாளொன்றுக்கு 6 முறை சேவை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தாம்பரம்-சென்னை கடற்கரை வழித்தடம்:

(49001) தாம்பரத்தில் இருந்து காலை 5.45 மணிக்குக் கிளம்பி, காலை 6.45 மணியளவில் சென்னை கடற்கரையை வந்தடையும்.

(49002) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்குக் கிளம்பி, இரவு 8.30 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும்.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடம்:

(49003) சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்குக் கிளம்பி, காலை 8.35 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

(49004) செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்குக் கிளம்பி, காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரையை வந்தடையும்.

(49005) சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குக் கிளம்பி, மாலை 5.25 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

(49006) செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்குக் கிளம்பி, இரவு 7.15 மணியளவில் சென்னை கடற்கரையை வந்தடையும்.

இந்நிலையில், ரயில் சேவையின் நேரம் குறித்த கருத்துகளை மக்களிடம் கேட்டறிவதற்காக வாட்ஸ்ஆப் எண்ணைப் பகிர்ந்துள்ளது தெற்கு ரயில்வே. வாட்ஸ்ஆப் செய்திகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், கருத்துகளைத் தெரிவிப்பதற்காகப் பிரத்யேகமாக இணைப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளது தெற்கு ரயில்வே.

வாட்ஸ்ஆப் எண்: 63747 13251