தமிழ்நாடு

கோடை விடுமுறையை ஒட்டி 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறையை ஒட்டி, 6 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களின் சேவை நீட்டிப்பு தொடர்பாக தெற்கு ரயில்வே மண்டலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

1) ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும், 06012 நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலின் சேவை 11-05-2025 முதல் 01-06-2025 வரை (4 கூடுதல் சேவைகள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

2) திங்கட்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும், 06011 தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலின் சேவை 12-05-2025 முதல் 02-06-2025 வரை (4 கூடுதல் சேவைகள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

3) வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும், 06035 தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை 09-05-2025 முதல் 30-05-2025 வரை (4 கூடுதல் சேவைகள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

4) ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும், 06036 திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை 11-05-2025 முதல் 01-06-2025 வரை (4 கூடுதல் சேவைகள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

5) ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும், 06030 திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை 11-05-2025 முதல் 01-06-2025 வரை (4 கூடுதல் சேவைகள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

6) திங்கட்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும், 06029 மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை 12-05-2025 முதல் 02-06-2025 வரை (4 கூடுதல் சேவைகள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கூறிய ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.