கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணமும் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களைச் சந்தித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விஷச்சாராய விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைபிடித்த காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷச்சாராய சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டில் 15 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது வருகிறது தமிழக காவல்துறை. மேலும் சம்பவம் நடந்த இடத்துக்குத் தமிழக அமைச்சர் உதயநிதி விரைந்துள்ளார்.