சங்கர் ஜிவால் ஐபிஎஸ் - ஜி.வெங்கடராமன் ஐபிஎஸ் (முன்வரிசையில் வலது) 
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கடராமன் நியமனம் | Venkatraman | DGP |

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டின் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (பொறுப்பு) ஜி. வெங்கடராமன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பணி மூப்பு அடிப்​படை​யில் தற்​போது டிஜிபிக்​களாக உள்ள சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய மூவரில் ஒரு​வர் டிஜிபி​யாக நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாகத் தற்போது பணியாற்றி வரும் வெங்கடராமனுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபியாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1968-ல் பிறந்த வெங்கடராமன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். 1994-ல் ஐபிஎஸ் ஆகத் தேர்வானார்.