சீமான் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஆடம்பரச் செலவு செய்யும் அரசுக்கு நெல் சேமிப்பு கிடங்கு கட்ட முடியாதா?: சீமான் கேள்வி | Seeman |

விஜய்க்கு நான் அண்ணனாக சொன்ன அறிவுரையை அவர் கிண்டல் செய்கிறார்...

கிழக்கு நியூஸ்

ஆடம்பரமாக மக்கள் காசை வீணாக்கத் தெரிந்த அரசுக்கு உணவு சேமிக்கும் கிடங்கைக் கட்ட முடியாதா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

”இந்த அண்டு மட்டும்தான் மழை பெய்கிறது, இப்படி நெல்மணிகள் முளைக்கிறது என்று இல்லை. நீண்ட காலமாக நமது விவசாயிகள் விளைக்கும் நெல்லை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்வது இல்லை. ஒரு தகர ஷீட் போட்டு சேமிப்புக் கிடங்கு கட்ட முடியாதா? ரூ. 150 கோடியில் நூலகம் கட்டுகிறார்கள். ஆனால் பள்ளிகள் இடிந்து தரையில் விழுந்து குட்டிச் சுவராக கிடக்கின்றன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கிறது. அங்கு வசதி போதவில்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கிளம்பாக்கத்தைக் கட்டினார்கள். திருச்சியில் ஏற்கெனவே விண்ணூர்தி நிலையம் இருக்கிறது. இப்போது புதியதாக ஒன்றைக் கட்டப் போகிறார்கள். இப்படி ஆடம்பரமாக மக்கள் காசை வீணடிக்க முடிகிறது. மக்கள் உயிர் தேவையாக இருக்கும் உணவுப் பண்டத்தைச் சேமிக்க கிடக்கு கட்ட முடியாதா? மதுபானங்களைப் பாதுகாகக் குளிர்சாதன வசதியுடன் கிடங்கு அமைத்து, சிசிடி கண்கானிப்புக் கருவி போட்டு இரண்டு காவலர்களைப் பாதுகாப்புக்குப் போடுவது அரசா? தரிசா? இதில் லேசாகத்தான் முளைத்திருக்கிறது என்கிறார்கள். வேளாண்மை என்றால் என்னவென்று தெரியாவதர்களிடம் நாட்டைக் கொடுத்தால் இதுதான் நிலைமை.

இது கொஞ்சிக் கிடக்கின்ற மீன்கள் நிறைந்த குளம் அல்ல, கொடிய முதலைகள் நிறைந்த குளம் என்று நான் விஜய்க்கு தம்பிக்கு அண்ணனாக அறிவுரை சொன்னேன்.ஆனால் அவர் அதையே மேடையில் பேசி என்னைக் கேலி செய்து சிரிக்கிறார். கரூர் துயரச் சம்பவத்திற்கு நாம்தான் பரிதாபப்படுகிறோம். ஆனால் அங்கு சில தாய்மார்கள் விஜய்க்காகத்தானே என் மகன் இறந்தான் என்றும், என்னை விஜய்க்கு அருகில் கொண்டு போய் நிறுத்த என் மகன் உயிரையே தியாகம் செய்துவிட்டான் என்றும் பேசுகிறார்கள். இதனால் தாய்மையின் மேல் உள்ள பற்று குறைந்து போவதாக நினைக்கிறேன். அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை” என்று பேசினார்.