தமிழ்நாடு

9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனி அன்று விடுமுறை!

நாளை சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகேஷ் குமார்

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் காலை அறிவித்தது. மேலும், இந்தப் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஃபெஞ்சல் புயல் வங்கக் கடலில் பிற்பகல் 2.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • சென்னை

  • மயிலாடுதுறை

  • திருவள்ளூர்

  • கள்ளக்குறிச்சி

  • விழுப்புரம்

  • கடலூர்

  • செங்கல்பட்டு

  • காஞ்சிபுரம்

  • ராணிப்பேட்டை

காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.