கோப்புப் படம் ANI
தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு மத நம்பிக்கை கிடையாது: அண்ணாமலைக்கு சசிகலா பதிலடி

யோகேஷ் குமார்

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை காட்டுகிறது என சசிகலா கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றியவர் என்றும் அவரது இடத்தை தற்போது பாஜக நிரப்பி வருவதாகவும் பேசியது சர்சையை கிளப்பியுள்ள நிலையில், அண்ணாமலையின் கருத்தை கண்டித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சசிகலா கூறியதாவது: “புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா சாதி, மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி புரட்சித்தலைவி அம்மாதான் என்பது நாடறிந்த உண்மை” என்றார்.