ஜக்கி வாசுதேவ்  @SadhguruJV
தமிழ்நாடு

நான் நலமாக இருக்கிறேன்: மருத்துவமனையிலிருந்து ஜக்கி வாசுதேவ் தகவல்

“எனது தலையில் ஏதோ இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் திறந்து பார்த்தனர். பின்னர் தலையில் ஒன்றும் இல்லை என்றனர்”

யோகேஷ் குமார்

தலைவலியால் அவதிப்பட்டு வந்த ஜக்கி வாசுதேவுக்கு தில்லி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவுக்கு கடந்த சில நாள்களாக ஒற்றைத் தலைவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது மூளையில் ரத்தகசிவு இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தில்லி அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் நலமுடன் இருப்பதாக ஜக்கி வாசுதேவ் தனது X தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

“எனது தலையில் ஏதோ இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் திறந்து பார்த்தனர். பின்னர் தலையில் ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது நலமாக இருக்கிறேன்” என்றார்.

பிரதமர் மோடி உள்பட பலரும் ஜக்கி வாசுதேவிடம் நலம் விசாரித்துள்ளார்கள்.