கமலின் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு தலா ரூ. 200 வழங்கியதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது.
ஈரோட்டில் திமுக சார்பில் பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து நேற்று கமல் ஈரோட்டில் பிரசாரத்தை தொடங்கினார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை என்றாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஈரோடு பிரசாரத்தில் பங்கேற்ற மக்களுக்கு ரூ. 200 பணம் வழங்கப்பட்டதாக காணொளி வெளியான நிலையில், இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருவதாக ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்ததைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.