மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்காக நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்காக நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு ANI
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பு: நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு

யோகேஷ் குமார்

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்புக்காக ரூ. 276 கோடி பணத்தை நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பிற்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ. 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ரூ. 276 கோடியை விடுவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 285 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அதில் ரூ. 115 கோடியே 49 லட்சத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், வெள்ளப் பாதிப்பிற்காக ரூ. 397 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ரூ. 160 கோடியே 61 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ. 3,498 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.