தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 83.
விருகம்பாக்கத்தில் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து நாளை (அக். 8) மதியம் 1 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கி, வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.