@envato
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: என்கவுன்டரில் இருவர் உயிரிழப்பு

யோகேஷ் குமார்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரெளடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவ்விருவரும் உயிரிழந்துள்ளார்கள்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்த ரெளடி பிரபாகரன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. நேற்று, மர்மநபர்கள் சிலர் அவரைக் கொலை செய்துள்ளார்கள். இதையடுத்து மாவட்டக் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைக் காவல்துறை தேடிவந்தது. இந்தச் சம்பவத்தில் மற்றொரு ரெளடியான ரகுவைக் காவலர்கள் தேடி வந்தார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ரயில் நிலையம் அருகே ரகுவும் அவருடைய கூட்டாளி அசானும் ஒளிந்திருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ரகுவையும் அவருடைய கூட்டாளியையும் காவர்கள் சுற்றி வளைத்தபோது, இருவரும் சோதனையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்க முயன்றுள்ளார்கள். பிறகு தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதி இருவரும் உயிரிழந்தார்கள். காயமடைந்த காவலர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.